கொடிய நோய்களில் ஒன்றான கண் ரத்தக் காய்ச்சல் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
கிரிமியன் காங்கோ ரத்தக் கசிவு என்ற இந்த நோயால் தாக்கப்பட்டால் 40 விழுக்காடு வரை உயிரிழப்புஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
உண்ணி பூச்சிகள் மூலம் பரவும் இந்தவகை நோய் காங்கோ நாட்டில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 7 முறை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 27 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா, எபோலா உள்ளிட்ட தொற்றுநோய்களின் வரிசையில் ஒன்றாக கண் ரத்தக் காய்ச்சலையும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.