13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் போட்டிகள் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 45 நாட்கள் இந்தியாவில் நடைபெற உள்ள, இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
சென்னை, பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய 10 மைதானங்களில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹார்திக் பாண்டியா, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.