Site icon ITamilTv

ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் தீவிரம்.. – வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்..!

Spread the love

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்;

சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு முன்பே பயண விவரத்தை பதிவிட வேண்டும். 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் வந்திருக்க வேண்டும்.

பரிசோதனையில் எஸ் வகை மரபணு கண்டறியப்பட்டால் ஓமிக்ரான் ஆய்வு மேற்கொள்ளப்படும்.கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் 7 நாட்கள் வரை வீடுகளில் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உத்தேச பரிசோதனை எடுக்கப்படும்.கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் சுகாதாரத்துறையை அணுக வேண்டும்.

தொற்று உறுதியான நபரின் முன், பின் இருக்கைகளில் பயணித்தவர்களுக்கும் பரிசோதனை செய்யவேண்டும். நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version