மத்தியப் பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்லி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று கண்ண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 350ற்கும் மேல் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஓமிக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படாத மத்திய பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் ஊரடங்கு நேரங்களில் போது மக்கள் வெளியில் வரக் கூடாது என்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதே போல், உத்தரப் பிரதேசத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.