“2 டோஸ்கள் போட்டவர்களுக்கு அதிகம் பரவும் ஒமைக்ரான்” – UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 50% மேற்பட்ட நபர்கள் இரண்டு டோஸ்களும் தடுப்பூசி செலுத்தியவர்கள் என UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து பெரும்பாலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், ஒமைக்ரான் என்னும் உருமாறிய தொற்று அநேக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டு அலைகளிலும் பரவியதை விட இந்த தொற்று அதிவேகமாக பரவக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி ஒருசிலருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4-ஆம் தேதியின் அறிக்கைப்படி, 75 நபர்களுக்கும் மேலாக ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் என UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்திருப்பதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு போட்கேஸ்ட் (Business Standard podcast) என்ற ஆங்கில செய்தி இணையதளம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்புகளை UK-விற்குட்பட்ட நாடுகளான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்கொண்டு வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, ஒமைக்ரான் தொற்று `நோய்களில் பேரலை’ என்று எச்சரித்துள்ளார்.

UKநாடுகளில் தடுப்பூசி செலுத்தியும் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts