நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகள் நசரத்பேட்டை புறவழி சாலையாக சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று பின் செல்லும் என சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.
வடபழனி, தாம்பரம் வழியாக பேருந்துகள் இயக்கப்படாது. ஈசிஆர் வழியாக புதுச்சேரி செல்லும் ஆம்னி
பேருந்துக்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
அதாவது, நவம்பர் 9, 10, 11 தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம்.
கிழக்கு கடற்கரை பாண்டிசசேரி வழியாக செல்லும் ஆம்னி அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.