புதிய பாதை, புதிய முயற்சிகளைத் தொடங்கும் திருநாளான விஜயதசமி தினத்தன்று, அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விஜயதசமி தினத்தில், மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அந்த வகையில், இன்று (24.10.23) நாடு முழுவதும் வியஜயதசமி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியஜயதசமி திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வாழ்த்து தெரிரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்..
“புதிய பாதை, புதிய முயற்சிகளைத் தொடங்கும் திருநாளான விஜயதசமி தினத்தன்று, அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் வாழ்விலும் நல்லதே நடக்கவும், நலம் செழிக்கவும், வளம் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.