கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள Auto Shankar சகோதரர் மோகனுக்கு ஒருமாத விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டபோது, மோகனும் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது
இதையடுத்து சுமார் 35 ஆண்டுகளாக சிறையில் உள்ள மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரியும், இடைக்காலமாக அவருக்கு 3 மாத விடுப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒருமாத விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடும்பத்திரனரின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றதது ஆனால் மோகனுக்கு 3 மாத விடுப்பு வழங்க நீதி மன்றம் மறுத்திவிட்டது.
இதையடுத்து மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்க அரசுத்தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ஒரு மாதம் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேலும் மோகன் வாரம் ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் வெளி ஊருக்கு செல்ல கூடாது எனவும் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் Auto Shankar . கள்ளச் சாராய விற்பனை மற்றும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்தவர் .
இவர் தனது 4-வது மனைவியான லலிதா , சுடலை, ரவி சம்பத் ,மோகன் . கோவிந்தராஜ் ஆகிய 6 பேரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார்.
1988-ம் ஆண்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆட்டோ சங்கர், அவரது தம்பி மோகன், மைத்துனர் எல்டின், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
Also Read : https://itamiltv.com/lal-salam-movie-ban-in-kuwait/
பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோ சங்கர், எல்டின் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது.
மற்ற 8 பேரும் ஆயுள் தண்டனை பெற்ற சிறையில் இருந்தனர் இவர்களில் ஆட்டோ மோகன், செல்வராஜ் ஆகிய 2 பேரை தவிர மற்ற அனை வரும் விடுதலையாகிவிட்டனர்.