இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்திய ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தியது.இதுவரை ஆண்டு முழுவதும் நடைபெற்ற தாக்குதலின் பட்டியலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் 118 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ,32 பயங்கரவாதிகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 2 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 55 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடப்பாண்டில் கொல்லப்பட்ட 118 பேரில் 77 பயங்கரவாதிகள் பாக். ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், 26 பயங்கரவாதிகள். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
மேலும் இந்த நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இந்தியாவிற்கு அரணாக செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.