சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில்,அதிமுக பொது குழு கூட்டம் இன்று நடைபெட்ரு வருகிறது.இந்த சூழ்நிலைனியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தீர்ப்பை பொறுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடையப்பெறுமா ?நடைபெறாதா ?என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படும்.இதனிடையே, பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி காலை 6.45 மணிக்கே தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.மறுபுறம்,ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களும் பொது குழு நடைபெறும் இடத்திற்கு வருகை அதிகமானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானத்தை வாசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். இதனை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம் செய்யப்பட்டது .
அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில் நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.