OPS Statement-அதிமுக கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகால பாஜக அதிமுக கூட்டணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்கு மீண்டும் கொண்டு வர பாஜக பல கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அதிமுக தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது.இந்த சூழலில் தான் பாஜக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில் அதிமுகவிற்காக கூட்டணி கதவுகள் திறந்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளிதல் ஒன்றுக்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேட்டி அளித்திருந்தார்.
அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாடு நாட்டின் முக்கியமான மாநிலம் ஆகும் .
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்து விட்டது, 3வது அணி அமைக்க திட்டமா.? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்துள்ளது.
இது குறித்து ஆலோசித்து வருவதாக அமித்ஷா( Amit Shah interview) நாளிதளில் சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் அதிமுககூட்டணி குறித்து (பாஜக கதவு திறந்து இருக்கும்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த கருத்து குறித்த கேள்விக்கு ,
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755537299516067872?s=20
அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தனிப் பெரும்பான்மை பெறும்.
எல்.முருகனுக்கு மத்திய அமைச்சராக இருக்கத் தகுதி இல்லை என்று டிஆர்.பாலு கூறியது தொடர்பான செய்தியை நான் முழுமையாகப் பார்க்கவில்லை.
அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு.
அவர்களின் பக்கம் கூலி ஆட்கள்தான் இருக்கின்றனர். யாரிடம் உண்மையான தொண்டர்கள் இருக்கின்றனர் என்பது மக்களவைத் தேர்தலில் தெரியவரும்.
நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம். விலகிச் சென்றிருப்பது பழனிசாமி அணிதான். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் (OPS Statement)கூறினார்.
PUBLISHED BY : S.vidhya