கேரள மாநிலத்தில் ஏற்கனவே கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று அம்மாநிலத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிதீர்த்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்நிலையில் நேற்று வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலச்சரவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : ஈரானில் ஹமாஸ் இயக்க தலைவர் படுகொலை..!!
புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 3069 பேர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் இன்று 5 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மண்ணில் அதிக ஈரத்தன்மை இருந்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .