இந்தியாவில் 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டியத்தில் அதிகாலை முதலே பெய்துவரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. புதிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்திப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், என்.டி.ஆர்.எப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்திலிருந்து ரெயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.இந்தநிலையில் கனமழை காரணமாக மும்பையில் ரயில்சேவை மற்றும் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.