அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிசூடு சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேரும் ,அதனை தொடர்ந்து டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப் பள்ளியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 19 மாணவர்கள் உள்பட 21 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்டது.மேலும் நியூயார்க்கில் 18 முதல் 21 வயது உடையவர்களுக்கு துப்பாக்கிச் சட்டம் தடை விதித்துள்ளது.