தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் வேட்டி சேலைகளை ஜனவரி 10-க்குள் நியாய விலை கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது .
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். அரிசி, சர்க்கரை, கரும்பு, பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் வேட்டி சேலைகளும் வழங்கப்படும்.
Also Read : திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் – அண்ணாமலை வினோத சபதம்..!!
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் வேட்டி சேலைகளை ஜனவரி 10-க்குள் நியாய விலை கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகளை ஜனவரி 10-க்குள் நியாய விலை கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது .
2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .