மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்மபூஷன் விருது ( rajinikanth and vijayakanth ) வழங்கப்பட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசின் பத்ம பூஷண் விருது கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
திரைவாழ்க்கையிலும் நிஜவாழ்க்கையில் விஜயகாந்த் ஆற்றிய நற்செயல்களுக்கு செய்யப்படும் மரியாதையே இந்த பத்ம பூஷண் விருது என திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் மனதார பாராட்டு தெரிவித்தனர்.
Also Read : மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 4 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த பத்மபூஷன் விருதை பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கம் நிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டார் .
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறிருப்பதாவது :
என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது .
விஜயகாந்த் மறைவை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. ( rajinikanth and vijayakanth ) அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.