சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் கோரிய வழக்கு ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமீன் கோரினார். ஆனால் அவர்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டு 35 முறை நீதிமன்ற காவல் முறை நீட்டிப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 32ஆவது முறையாக நீடிப்பு
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்படுகிறது. மேலும் 330 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் உள்ள
அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு , “330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது.
பல விசாரணை கைதிகள் 2 , 3 ஆண்டுகள் சிறையில் உள்ளது என கூறி ,’அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் , மனு மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அதன்படி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராவதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறினர்.