பழனியில் 4 அடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட முருகன் சிலை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருகே ரயிலடி சாலையில் பிரபல தங்க நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
அந்த வகையில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட முருகன் சிலையைப் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் மக்கள் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த கடையின் பொது மேலாளர் நிஷான் கூறுகையில், இந்த சிலையை வடிவமைக்க 1 வருடம் காலம் தேவைப்பட்டது. மேலும் இதற்கு பல்வேறு உலோகங்கள் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 4 அடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட முருகன் சிலை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்று சிலைகள் மக்கள் விற்பனைக்காகச் செய்யப் போவதாகத் தெரிவித்தார்.