பழனி முருகன் கோயிலில், மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய பெட்டி பொருத்தும் பணிகள் முடிந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி (palani murugan temple) கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நவீன வசதிகள் கொண்ட 3ம்இழுவை ரயிலுக்கான 2 பெட்டிகள் கடந்த ஜனவரியில் வாங்கப்பட்டு அதனை தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் நடந்து வந்தது.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி.,யிலிருந்து வல்லுநர்குழு அங்குச்சென்று ரயில் இழுவைப்பெட்டிகள், தண்டவாளம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும் ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில், மின் இழுவை ரயிலில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக 75 பேர் அமர்ந்து செல்லும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.
மின் இழுவை ரயிலில் பயணம் செய்வோர் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை எடுத்துச்செல்ல அனுமதியில்லை, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.