பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்
பிரான்ஸ் நாட்டின் ஷட்டேவு (chateauroux) நகரில் பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பத்து மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் ஜோடி சீனாவின் சாவோ, மின்ங்கிளி இணையை எதிர்கொண்டது, இதில் இந்திய இணை சிறப்பாக செயல்பட்டு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட்டு தங்க பதகக்த்தை தட்டி சென்றது.
பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்தியா வெல்லும் 3வது தங்க பதக்கம் இதுவாகும்.
ஏற்கனவே 10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் அவினி லேகேரா உலக சாதனை புள்ளியோடு தங்கம் வென்றிருந்தார். அவரை தொடர்ந்து இந்தியாவின் ஸ்ரீ ஹரியும் தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது