நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில், பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள நிலையில், இந்தியாவில் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.