Air India : வீல் சேர் கிடைக்காததால் விமானத்தில் பணயம் செய்த முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இம்மாதம் 12ம் தேதி அமெரிக்காவில் இருந்து வயதான முதிய தம்பதி மும்பை வந்தடைந்தனர் . பயணத்திற்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வீல்சேர் வசதி வேண்டும் என இந்த முதிய தம்பதி கோரிக்கை வைத்திருந்தனர் .
இதையடுத்து அமெரிக்காவில் இருந்து மும்பை வந்ததும், இந்த தம்பதி வீல் சேர் கேட்டுள்ளனர் ஆனால் அங்கு போதுமான வீல் சேர் இல்லாததால் மனைவிக்கு மட்டும் வீல் சேர் ஏற்பாடு செய்யப்பட்டது.
கணவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி விமநிலைய ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஊழியர்களின் பேச்சை கேட்டு மனைவியை தனியாக அனுப்ப விரும்பாத கணவர், நடந்தே சென்றுள்ளார் . சுமார் 1.5 கி.மீ., நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே வீல் சேர் வசதி வேண்டும் என முறையாக கோரிக்கை வைத்தும் அந்த தமபதிக்கு வீல் சேர் கிடைத்ததால் நடந்து சென்ற அந்த 80 வயது முதியவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது .
Also Read : https://itamiltv.com/ttv-dhinakaran-spoke-about-election/
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த விசாரணையின் முடிவில் வீல் சேர் கிடைக்காததால், (Air India) அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது.