பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் | கடந்த ஒரு வாரமாக, பார்வையற்றோருக்கு அரசுப் பணிகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரியும்,9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் மற்றும் கோடம்பாக்கம் மேம்பாலத்திலும் மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கடந்த ஒரு வாரமாக பார்வை மாற்றுத்திறனாளிகள் நடத்திய இந்த சாலை மறியல் போராட்டத்தை காவல்துறையினரைக் கொண்டு தமிழக அரசு அப்புறப்படுத்தியது.
மேலும் அவர்களுடன் பேச்சு நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை காவல்துறை கைது செய்தது.
மேலும் இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், அதிகாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து 50 கி.மீக்கு அப்பால் உள்ள வல்லக்கோட்டை என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
தங்களை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்ட ராமராஜன் என்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் அடித்து உதைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகத் தாய்மொழி நாள்: தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் -ராமதாஸ்!
இவை அனைத்தும் மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்கள் ஆகும்.பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை ஆகும்.
இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அவர்கள் போராடி வருகின்றனர்.
இடைப்பட்ட காலத்தில் அவர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்தக் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான் அவர்கள் மீண்டும், மீண்டும் (பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்) நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1759838987097940271?s=20
மாற்றுத்திறனாளிகள் 9 கோரிக்கை:
- மாற்றுத்திறனாளிகள் 9 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பின்மை நிவாரண நிதியை 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்,
- மாதாந்திர உதவித்தொகையை 1,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
- தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வழங்க வேண்டும்.
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன விலக்கு அளித்தல்,
- டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்துதல் உட்பட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
- இதனை அடுத்து இரு தினங்களுக்கு முன்னர், அமைச்சர் கீதா ஜீவனுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.