ராமேஸ்வரத்தில் ஒருவர் திரைப்பட இயக்குனர் என கூறி பல பெண்களை ஏமாற்றி பணம்பறித்ததுடன் உல்லாசமாக இருந்த விவகாரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் வசித்து வருபவர் இம்மானுவேல்ராஜா. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி ராமேஸ்வரத்தில் முகாமிட்டு பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இம்மானுவேல் ராஜாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒருபெண், டவுண் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, அவர் திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல்போன்கள், சிறிய கவரிங் தோடு ஆகியவை போலிசாரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் அவரது செல்போனை பரிசோதித்தபோது, அதில் சில ஆபாச வீடியோக்கள் இருந்தன இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குனர் என கூறி ஒரு ஆசாமி, பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பறித்து உல்லாசமாக இருந்த சம்பவம் ராமநாதபுர மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.