டெல்லியில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில், வரலாறு காணாத வகையில், பெட்ரோல், டீசல் உயர்ந்துள்ளது. டெல்லி, தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி தற்போது டெல்லி அரசு, மாநிலத்தில் வாட் வரியைக் குறைத்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைந்துள்ளது. புதிய விலை இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.