தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை..!

திருச்சியருகே தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில், சாரதி நகரில் வசிப்பவர் பவானி. இவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார் . இவர் மீது   வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், முதல் லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில்  7 பேர் கொண்ட குழுவினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவருக்கு சொந்தமான லால்குடி அடுத்துள்ள வாளாடி பெட்ரோல் நிலையம், திருச்சி மணச்சநல்லூர் சாலையில் உள்ள SVR மேல்நிலைப் பள்ளி, அரியலூர் மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து பல்வேறு  ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் நேற்று  இரவு சோதனையின் போது கைப்பற்றப்பட்ட  பணம், சொத்து மற்றும்  பல்வேறு பொருட்கள் வீடுகள் தொடர்பாக விபரங்கள் குறித்து அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

Total
0
Shares
Related Posts