நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புடலங்காயில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. மேலும், இதன் காய், வேர், இலை ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் உள்ளது.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான புடலங்காய் சிறந்த மருத்து குணங்களுக்காக அறியப்பட்டது. புடலங்காயில் அதிகளவு வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, அயோடின், பொட்டாசியம் போன்றவை உள்ளது.
எனவே இதை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், உடல் சூட்டை தணிக்கும், உடல் எடையை குறைக்கும் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
புடலங்காயின் மருத்துவக் குணங்கள்.:
பொதுவாக, புடலங்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளதால், இதை சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
இதையும் படிங்க: Custard Apple : சீதாப்பழத்தில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்!!
இதயக்கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து தினதோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கி விடும்.
புடலங்காயின் வேரை ஒரு கைப்பிடி எடுத்து, மையாக அரைத்து சிறிதளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
அதைப்போல் புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், அனைத்து வகையான சத்துகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும்.
இதையும் படிங்க: Sunday Special : உடல் உஷ்ணத்தை குறைக்க வெந்தயக்களி செய்து சாப்பிடுங்க!
புழுவெட்டு மற்றும் பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், புடலங்கொடியின் இலையை அரைத்து தலையில் தடவ, புழுவெட்டு மறையும். தொடர்ந்து காயை உணவாக சாப்பிட்டு வந்தால், பொடுகு நீங்கும்.
பெண்கள் புடலங்காயை குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால், கருப்பை கோளாறுகள் நீங்கும்.
மிகவும் மெலிந்த உடல் எடை கொண்டவர்கள், உடல் சு+டு உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.