ஏழரை சனி என்றால் என்ன?
நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வந்து அமரும்போது ஏழரை சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரை சனி என்கிறோம்.
ஏழரை சனியின் தாக்கம் குறைய வழிபாடுகளும் விரதங்களும்:
ஏழரைச் சனி நடக்கும் காலங்களில் பைரவரை வழிபாடு செய்வது. சனிக் கிழமைகளில் சனியின் காயத்திரி மந்திரத்தை சொல்லுவது, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு பூஜை அறைக்கு வந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தியானிப்பது என செய்து வந்தால் நல்லது.
ஏழரைச் சனி பரிகார ஸ்தலங்கள் :
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்.
குச்சனூர் சனீஸ்வரன் கோவில்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில்.
திருவானைக்காவல் சனீஸ்வரர் கோவில்.
ஓமாம்புலியூர் சனீஸ்வரர் கோவில்.
இதையும் படிங்க: அயோத்தி ராமருக்கு தினமும் 1 Hour Rest
ஏழரைச் சனி பரிகாரங்கள் :
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம்.
சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
இதையும் படிங்க: Murugan | முருகன் என்றால் என்ன அர்த்தம்?
கோ தானம் செய்யலாம்.
ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்கினால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை மாலை சாத்தி வழிபடலாம்.
தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.