ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்பொருள் தளத்தில் உள்ள புதைகுழியில் தங்க வைரம், வெண்கலம், இரும்பு பொருட்கள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறையின் தலைமையிலான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ,நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏஎஸ்ஐ செயற்கைக்கோள் வரைபடத்தின் உதவியுடன் அப்பகுதியை வரைபடமாக்கியது மற்றும் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது. 27 நாட்களுக்குப் பிறகு 2.4 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு புதைகுழியில் ஒரு வெண்கல சல்லடை உட்பட வேறு சில பொருட்களுடன் வைரம் கலத்தின் அடிப்பகுதியில் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சி சைட் என அழைக்கப்படும் 1902ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் பரத்தை சுற்றிலும் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இதேபோல், அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் பள்ளம் உள்ளது. எனவே, முன்னோர்கள் இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் பழங்கால நாகரிகங்கள் தொடர்பான தொல்பொருட்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.