மதுரையில் கோயில் சொத்துக்கள் திருடப்படுவதாக கூறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு அதற்கான ஆதாரத்தை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது:
கடந்த 20 ஆம் தேதி மதுரை உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்ட “தென் தமிழக குடைவரை கோயில்”கள் குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில்,”தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சொத்துக்களை திருடி வருகிறார்கள்,கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை. நம் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, இந்துக்கள் எவ்வாறு கோவில்களை கட்டியுள்ளனர் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்று பேசி இருந்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ,ஆணையர் அலுவலகத்தில் கம்பிவட ஊர்திகள், தங்கத்தேர், வெள்ளித்தேர் உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு :
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பக்தர்களின் குறையை போக்க ‘குறைகளை பதிவிடுக’ என்ற திட்டத்தைஅறிமுகம் செய்தோம். அறநிலைய துறைக்கு தொடர்புடைய 4 கோடிபக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றும் பணிகள் நிறைவுற்றுள்ளன. பல ஆன்மிக புரட்சிகளை திமுக செய்துவருகிறது.
தமிழகத்தில் திமுக இந்துக்களுக்கு எதிரான ஆட்சியை செய்கிறது என்ற பிம்பத்தை மத்தியஅரசு ஏற்படுத்த முற்பட்டது. அதில் படுதோல்வி அடைந்தார்கள். கோயில் சொத்துக்கள் திருடப்படுகின்றன என மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
உயர் பொறுப்பில் இருக்கும் அவர்உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால், அதன்மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக முன்வைத்தால், அதற்குண்டான விளக்கமும் தவறு நடந்திருந்தால், அதன்மீதான நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. கோயில்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.