Ayodhya Ram Mandir:அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரசேத மாநிலம் அயோத்தியில்,ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.
கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
Read Also :https://itamiltv.com/palaniswami-said-survey-before-upgrading-panchayats-in-tamil-nadu/
இந்து மத தலைவர்களை தவிர, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அரைகுறையாக கட்டப்பட்டுள்ள கோயிலை அரசியல் லாபத்திற்காக திறக்கப்படுவதாகக் கூறி பல கட்சிகள், அழைப்பை நிராகரித்துள்ளன.
இந்த நிலையில்,அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்.. “அயோத்தி ராமர் கோயில்(Ayodhya Ram Mandir) கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன.
Read Also :https://x.com/ITamilTVNews/status/1745698206783254583?s=20
கும்பாபிஷேகம் நிகழும் நன்நாளில் இந்திய மக்களின் பிரதிநிதியாக கலந்துகொள்ள கடவுள் என்னைப் படைத்துள்ளார்.
இதை மனதில் கொண்டு நான் 11 நாட்கள் சிறப்புப் பூஜையை இன்று (ஜன.12) தொடங்குகிறேன்.
மிகவும் புனிதமான, வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்வைக் காண நான் பாக்கியம் செய்துள்ளேன். முதன்முறையாக நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன்.
இந்த 11 நாட்கள் பூஜைக்காக மக்களின் ஆசியைக் கோருகிறேன்” எனப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி கும்பாபிஷேக நெறிமுறைகளின்படி பூஜைகள் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.