சென்னை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில், 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். சிதம்பரம் நோக்கிச் சென்ற பேருந்து, சென்னை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மோதியது, மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “செங்கல்பட்டில் நடந்த விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.