குஜராத்தில் ரோபோ பரிமாறப்பட்ட தேநீரை ருசித்த பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரில் ரோபோ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியை வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை சங்கங்கள், வர்த்தகம் மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், இளம் தொழில்முனைவோர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது குஜராத் அறிவியல் நகரில் உள்ள ரோபோட்டிக்ஸ் கேலரியில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கலந்து கொண்டார்.மேலும் ரோபோட்டிக்ஸ் கேலரியில் உள்ள கபேயில் ரோபோக்கள் வழங்கிய ஒரு கோப்பை தேநீரை அருந்தினார்.

மேலும் இந்த கண்காட்சியில் ரோபாட்டிக்ஸ் கேலரி டிஆர்டிஓ ரோபோக்கள், மைக்ரோபோட்கள், ஒரு விவசாய ரோபோ, மருத்துவ ரோபோக்கள், விண்வெளி ரோபோக்கள் மற்றும் பலவற்றைக் காட்சிப்படுத்தபட்டது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.