pm modi-பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை:
ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல்.ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும்.
இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும்.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
மேலும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெறும்.
Read Also :https://itamiltv.com/news-tamilnadu-invitation-to-durga-stalin-to-come-to-ayodhya-ram-temple/
பிரதமர் வாழ்த்து:
இந்த நிலையில்,பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும்,
புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” எனத்(pm modi) பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Read Also :https://x.com/narendramodi/status/1746735327291625604?s=20
உள்துறை அமைச்சர் அமித் ஷா:
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.