மத்திய அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி(Udhayanidhi) காட்டமாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி,பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 60 பள்ளி மாணவர் – மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டும் சகோதரர்கள் 700 பேருக்கு சீருடைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி,”தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து இருந்தோம். அந்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றதால் இதுவரை 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
சட்டப்பேரவையிலும் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் அந்த மசோதாவில் கையெழுத்திடாமல் இருந்து வருகிறார்.எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.