பிரதமர் திரு நரேந்திர மோடி 4 ஜூலை 2022 அன்று பீமாவரம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்தின் காந்திநகர் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.இந்த நிலையில் காலை சுமார் 11 மணியளவில், பீமாவரத்தில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 4:30 மணியளவில், காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் , இதன் ஒரு பகுதியாக, பீமாவரத்தில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும் அல்லூரி சீதாராம ராஜுவின் 30 அடி உயர வெண்கலச் சிலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையை சுவரோவிய ஓவியங்கள் மற்றும் AI-இயக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையை ஒட்டி ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.