திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்.18 ஆம் தேதி பிரதமர் மோடி (pm modi) வருகை தர உள்ளார்.
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கினார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது அப்பகுதிகளில் உள்ள மக்களை அண்ணாமலை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று (திங்கள்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில்
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான என் மண், என் மக்கள் பிரசார நடைப்பயணம் நடைபெற்றது.
இதையும் படிங்க : Delhi குடியரசு தின அணிவகுப்பு – தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு பரிசு
அப்போது தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கொண்டு வருவது பாஜகவின் இலக்கு என அவர் பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நடைப்பயணத்தின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி (pm modi) தமிழகம் வருகிறார்.
இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
https://x.com/ITamilTVNews/status/1751979169259680009?s=20
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை வந்திருந்தார். அபோது சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவில், ராமநாதபுரம் கோவிளுக்கு சென்ற சாமி தரிசனம் செய்தார். இதனால் தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.