பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மீது ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி , ஹீரோ , வில்லை என அனைத்திலும் பட்டயகிளப்பும் இவருக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் படங்களில் நடிப்பதை தாண்டி தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு சிலர் இந்த நிகழ்ச்சிக்கும் இவருக்கும் சிலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 200 ஆண்டுக்கு மேலான பாரம்பரியமிக்க குடிசை தொழிலான ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பாளர்களை புண்படுத்தும் வகையிலும்,தொழிலை நசுக்கும் விதமாகவும், நிகழ்ச்சி ஒன்றில் தனியார் டிவி நிறுவனத்தாரை எதிர்த்தும், குறிப்பிட்ட (பிக் பாஸ்) நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தொகுப்பாளர் (விஜய் சேதுபதி ) மீது நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தீபக் ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து பேசிருந்தது குறிப்பிடத்தக்கது.