திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர் மற்றும் அமைச்சராக இருந்தால் காலையில் ஒரு வீட்டில் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் என பாஜக MLA வானதி ஸ்ரீனிவாசன்(vanathi srinivasan) பேசியது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் பாஜகவின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை பாஜக அமைச்சர் வானதி ஸ்ரீனிவாசன்(vanathi srinivasan) கலந்து கொண்டார்.
அப்போது அந்த கூட்டத்தில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன் திமுகவில் உறுப்பினராகவும்,அமைச்சராகவும் இருந்தால் அவர்கள் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள்.திமுகவில் திமுகவினர் ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள் அது காலையில் ஒரு வீட்டில் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள்.இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜீன் ஏன் தெரிவித்தார்.
மேலும் பாஜகவினரைப் பற்றிச் சொன்னால் ஆல்மார்க் முத்திரை அவர்களுக்கு ஒரே வீடு தான் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் வானதி ஸ்ரீனிவாசன் பேசிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
வானதி ஸ்ரீனிவாசனின் இந்த பேச்சு திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியின் துணைத் தலைவர் வெங்கடேஷ் கோவை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பாஜகவில் உள்ள பெண்கள் குறித்து திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியை விட்டு திமுக நீக்கியது. அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் திமுகவினரை அவதூறாக பேசிய வானதி சீனிவாசன் மீது அந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.