நெதர்லாந்து ஆம்ஸ்டெர்டம் நகரில் கொரோனா ஊரடங்கை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பொதுமக்கள் மீது நாயை ஏவி கடிக்கவிட்ட போலீசாரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று நெதர்லாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருசில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மீது, போலீசாரின் நாய் கவ்வி கடிக்கிறது. நாயை விட்டு மீண்டுவருவதற்கு போராட்டக்காரர் ஒருவர் முயற்சியில் ஈடுபட்டபோதும் அவரது கையை விடாமல் அழுத்தமாக கடித்தபடி அந்த நாய் இழுத்துபோடுகிறது. இந்த காணொலி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
#Netherland #democracy It's so terrible. https://t.co/h6O2rxG6Qp
— 齐鲁晚报 Qilu Evening News (@QiluEveningNews) January 2, 2022
நெதர்லாந்தின் போலீசாரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. நாயை விட்டு கடிக்கவிட்ட போலீசாரின் மிருகத்தனமான செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.