மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது ( BJP officials ) தொடர்பாக
பாஜக நிர்வாகிகள் 2 பேர் மீது அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய சென்னை மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் மூர்த்தி, அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமார் ஆகியோர் மீது அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் நேரில் சந்தித்தபோதும் ஒருவரை ஒருவர் மிக கோரமாக தாக்கிக்கொண்டனர் .
இதையடுத்து இந்த இருவரும் தனித்தனியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . பின்னர் இந்த வழக்கு குறித்து விசாரித்த போலீசார் தீவிர விசாரித்தபின் ஒரு முடிவுக்கு வந்தனர் .
இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணைக்கு பின் மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ( BJP officials ) மேலும் விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.