மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதியை வச்சே திமுகவ செஞ்சுட்டாரு என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயாமொழி மாயாண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக அரசின் அணுமுறை கண்டிக்கத்தக்கது.திருக் கோயிலை கைப்பற்றி தீட்சிதர்களை விரட்டியடிக்கலாம் என்ற உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக் குற்றவாளியாக கைதாகி சிறையில் இருக்கும் அவர் எப்படி அமைச்சராக தொடர முடியும். தன்னுடைய கட்சி அமைச்சர்கள் செய்ய கூடிய ஊழல்களை மறைப்பதற்காக
ஆளுநர் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் அமைச்சர் உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிகாரம் ஆளுநருக்கு இருக்கு என்றால் அதை பதவியை விட்டு நீக்குவதற்கு அதிகாரம் இல்லையா.. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சட்டையை கிழித்து கொண்டு ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் ஸ்டாலின்.
அப்போது ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை முதல்வருக்கு தெரியாத என கேள்வியெழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனப்படி தன் கடமையை செய்து வருகிறார். ஆனால் இந்த திரவிட மாடல் அரசாங்கம் ஆளுநருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.
திமுகவை விடுதலை சிறுத்தை கட்சி தவறாக பயன்படுத்தவதாக தெரிவித்தார். நேற்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல்துறை அனுமதியுடன் பொது கூட்டம் நடைபெற்றது. அப்போது அத்துமீறி உள்ள நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுகுழு கூட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்தனர்.அனால் இந்த சம்பவத்தை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார்.
பின்னர் மாமன்னன் திரைப்படம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு,திமுகவின் பிரச்சார சாதனத்தை பயன்படுத்தி திமுகவில் பட்டியலின மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ் இயக்கி உள்ளனர் என பாஜக நிறுவனர் அர்ஜுன் சம்பத் கடுமையாக விமர்சித்தார்.