வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி (sathyaprathab shahoo) சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது :
தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி.
ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி.
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி.
Also Read https://itamiltv.com/gujarat-was-bowled-out-for-89-runs-due-to-delhis-aggressive-bowling/
மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467.
முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம்.
80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் – 6,14,002;
3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை – 950.
ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76 பேர்.
வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது
மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால், வாகனம் ஏற்பாடு செய்யப்படும்
மொத்த வாக்குச்சாவடிகளில் 44,800 வாக்குச்சாவடிகள் (65%) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட (sathyaprathab shahoo) காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.