special buses :தமிழ் நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 12 முதல் 15 வரை ஆகிய தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளது.
சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருப்பதாவது: பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சிறப்பு பேருந்துகள்:
ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் தினசரி 2,100 பேருந்துகள் வீதம் மொத்தம் 6,300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
சென்னையில் இருந்து மட்டும் மேற்சொன்ன மூன்று நாட்களில் சிறப்பு பேருந்துகள் 4,706 பேருந்துகள் இயக்கப்படும். இதன்மூலம் மொத்தமாக 11,006 பேருந்துகள் இயக்கப்படும்.
பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
Also read :https://itamiltv.com/ramadoss-raised-a-question-to-tn-govmnt-over-10-5-reservation/
சிறப்பு எண்கள்
பண்டிகை காலத்தை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலித்தால், 18004256151 உள்ளிட்ட எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
SETC பேருந்துகள் 2 இடங்கள்:
தொடர்ந்து பேசிய போக்குவரத்துக்துறை அமைச்சர் சிவசங்கர், பெங்களூரு செல்லும் SETC, ஈ.சி.ஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், வேளாங்கண்ணி செல்லும் SETC பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.
NH-45 வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
Also Read:https://x.com/ITamilTVNews/status/1744260909193920795?s=20
இந்த இரண்டு பேருந்து நிலையங்களை தவிர வேறு எங்கிருந்தும் SETC எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்படாது.
விடுமுறை முடிந்ததும் சிறப்பு பேருந்துகள்:
பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் வழக்கமான 2,100 உடன் 4,830 சிறப்பு பேருந்துகள்(special buses) இயக்கப்படும்.
பிற ஊர்களில் இருந்து 6,459 பேருந்துகள் இயக்கப்படும்.பொங்கலுக்கு பிறகு மொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்படும்.
tnstc.in என்ற இணையதளத்திலும், tnstc அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.