சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி (Ponmudi) மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2006 -2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி 1.75 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின், மேல்முறையிட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், கடந்த 19 ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Also Read : https://itamiltv.com/cheif-minister-mkstalin-pays-tribute-to-kuka-selvam-body/
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனையை குறைத்து வழங்குமாறு நீதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
உடல்நிலையை கருத்தில் கொள்ளும் அதே நேரத்தில், குற்றத்தின் தன்மையையும் பார்க்க வேண்டும் என்று நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மேல்முறையீட்டிற்காக அவகாசம் கோரப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மேல்முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 22ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடி, அவரின் மனைவிக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி (Ponmudi) மேல்முறையீடு செய்துள்ளார்.