பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த நிலநடுக்கத்தால் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஹர்னாய் மாவட்டமே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப் பிரதேசம் என்பதால் நிலகடுக்கத்தை தொடர்ந்து பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் 6 பேர் குழந்தைகள். சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.