தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க மேலும் 2 ஹீரோக்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தற்போது தனது 67 ஆவது படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
லியோ படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அவரின் அடுத்த படமான தளபதி 68-ன் படத்திற்கான பணிகளும் தொடங்கி உள்ளது. வெங்கட் பிரபு இயக்க உள்ள இப்படத்தை, விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விரைவில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்தும், பிரபுதேவாவும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரபுதேவா உடன் வில்லு, போக்கிரி போன்ற படங்களில் விஜய் பணியாற்றி இருக்கிறார். ஆனால் பிரசாந்த் உடன் அவர் பணியாற்ற உள்ளது இதுவே முதன்முறை எனபது குறிப்பிடத்தக்கது.