உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில், புளூபக் வேட்டையாட சென்ற நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் (shot) வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பாய்ந்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில், வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கர்பிணிப் பெண்ணின் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டது.
இதனையடுத்து, உடனடியாக அந்த பெண் அருகிலுள்ள ஒரு சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர், மேல் சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் 30 வயதான வந்தனா என்றும், அந்த பெண் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வந்தனாவின் கணவர் பூபேந்திர சிங் ராஜ்புதிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், பூபேந்திர சிங் தனது மனைவியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ப்ளூபக் வேட்டையாட அங்கு வந்த இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் (shot), தனது மனைவி மீது குண்டு பாய்ந்ததாகவும், மேலும் கர்ப்பிணியான அவரது வயிற்றில் குண்டு பாய்ந்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் தன் மனைவியை நோக்கி விரைந்ததாகவும், அவள் மூச்சுத் திணறுவதைப் பார்த்து உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அனுமதித்ததாகவும் பூபேந்திரா கூறினார்.
இதற்கிடையில், துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என்றார்.
மேலும், மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையில், வந்தனா மற்றும் அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்த நிலையில், சிறிது நேரத்தில் வந்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.