தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ( Water pond ) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தேர்தல் முடிவுக்கு வந்ததாலும், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து அக்கினி நட்சத்திரம் தொடங்க இருப்பதாலும், தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை ஆண்டுதோறும் நாம் திறப்பதுபோல்.
இந்த ஆண்டும் (2024) அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
“இயன்றதைச் செய்வோம் இல்லாதவற்கே” என்று கேப்டன் நமக்கு சொல்லி கொடுத்த பாதையில், நாம் மக்களுக்கு இந்த கோடை காலத்தில் நம்மால் இயன்ற உதவிகளை செய்து கோடை வெப்பத்தில் ( Water pond ) இருந்து மக்களை காப்பது நமது கடமையாகும் என பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.