சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40ஆயிரம் ரூபாயை கடந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் எதிரொலியால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
பங்குச்சந்தைகள் வீழ்ச்சி காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதால், அதன் விலையும் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 85 ரூபாய் அதிகரித்து 5,055ரூபாய்க்கும், சவரன் தங்கம் 680 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத வகையில் 40,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 1,800 ரூபாய் அதிகரித்து 75ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.